இந்திய வரி அதிகரிப்பு : ஆஸ்திரேலிய கொண்டைக்கடலை உற்பத்தி குறைப்பு

கான்பெர்ரா

ந்திய இறக்குமதி வரி அதிகரித்தால் ஆஸ்திரேலியா நாட்டின் விவசாயிகள் கொண்டைக் கடலை உற்பத்தியை குறைத்துள்ளனர்.

ஆஸ்திரேலியாவில் இருந்து இந்தியாவுக்கு அதிக அளவில் கொண்டைக்கடலை ஏற்றுமதி நடைபெறுகிறது.    சமீபத்தில் அமெரிக்கா ஸ்டீல் உள்ளிட்ட பல பொருட்களுக்கு இறக்குமதி வரியை அதிகரித்தது.   அதனால் இந்தியப் பொருளாதாரம் மறைமுக பாதிப்புக்கு ஆளாகி உள்ளது.   அதை ஒட்டி இந்தியா இறக்குமதி வரியை அதிகரித்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கொண்டைக்கடலைக்கு கடந்த டிசம்பர் மாதம் இறக்குமதி வரி 30% ஆக இருந்தது.  அதன் பிறகு பிப்ரவரி மாதம் 40% ஆகி மார்ச் மாதம் 60% ஆனது.    ஆனால் ஏற்கனவே குறிப்பிட்ட படி அமெரிக்காவுக்கு ஏற்ப இந்தியாவும் இறக்குமதி வரியை அதிகரித்ததில் தற்போது அது 70% ஆகி உள்ளது.

ஆஸ்திரேலியாவைப் பொறுத்தவரை 30% வரி இருந்தபோது ஏற்றுமதி செய்வது நஷ்டம் இல்லாமல் இருந்தது.  அதன் பிறகு லாபத்தில் குறைவு ஏற்பட்டு தற்போது முழுக்க முழுக்க நஷ்டமாகும் நிலை ஏற்பட்டுள்ளது.    அத்துடன் சென்ற வருடம் ஏற்பட்ட வறட்சியால் விவசாயிகள் ஏற்கனவே நஷ்டம்  அடைந்துள்ள்னர்.  அதையும் சேர்த்தால் தற்போதைய நிலைமையில் ஆஸ்திரேலியாவுக்கு இந்த ஏற்றுமதி மூலம் 100% நஷ்டம் ஏற்படும் என கணக்கிடப்பட்டுள்ளது.

எனவே ஆஸ்திரேலியா விவசாயிகள் கொண்டைக்கடலை உற்பத்தியை பாதிக்கு மேல் குறைத்துள்ளனர்.   தற்போது ஆஸ்திரேலியாவில் சுமார் 494000 ஏக்கரில் இருந்து 618000 ஏக்கர் நிலத்தில் கொண்டைக்கடலை பயிரிடப்படுகிறது.   கடந்த வருடம் கொண்டைக்கடலை 10 லட்சம் டன் விளைவிக்கப்பட்டது.   இந்த வருடம் கொண்டைக்கடலை விளைச்சல் 5 லட்சம் டன்னாக குறைக்கப்பட உள்ளது.