Random image

ராகுல் காந்தியால் மனம் மாறி புகாரை வாபஸ் வாங்கிய காங்கிரஸ் தொண்டர்

கொல்கட்டா

ராகுல் காந்தியின் டிவிட்டர் பதிவைக் கண்டு மனம் மாறிய காங்கிரஸ் தொண்டர் இணைய தொடர் மீதான புகாரை திரும்பப் பெற்றுள்ளார்.

கொல்கத்தாவை சேர்ந்த அனுராக் காஷ்யப் மற்றும் விக்ரமாதித்ய மோத்வானி இருவரும் இணைந்து தயாரித்த சேக்ரட் கேம்ஸ் தொடர் நெட்ஃப்ளிக்ஸ் இணைய தளத்தில் வெளியாகிறது.  இந்த தொடரில் மறைந்த காங்கிரஸ் தலைவர் ராஜிவ் காந்தியின் புகழைக் கெடுக்கும் வகையில் பல காட்சிகள் அமைந்துள்ளன.    இது காங்கிரஸ் தொண்டர்களின் மனதை பெரிதும் புண்படுத்தியது.  இதை எதிர்த்து காங்கிரஸ் தொண்டர் ராஜீவ் குமார் சின்ஹா புகார் ஒன்றை தொடுத்திருந்தார்.

ராஜிவ் குமார் சின்ஹா

காங்கிரஸ் தலைவரும் மறைந்த ராஜிவ் காந்தியின் மகனுமான ராகுல் காந்தி தனது டிவிட்டரில், “பாஜக மற்றும் ஆர் எஸ் எஸ் இயக்கம் கருத்து சுதந்திரம் என்பது ஜனநாயக அடிப்படை உரிமை எனக் கருதுவதில் மிகுந்த நம்பிக்கை உடையது என நம்புகிறேன்.    எனது தந்தையார் இந்திய நாட்டின் சேவைக்காகவே வாழ்ந்தார்.  அதற்காகவே மரணம் அடைந்தார்.  ஒரு இணைய தளத்தில் வரும் கற்பனைக் கதாபாத்திரதால் அவருடைய புகழை அழிக்க முடியாது” என பதிந்திருந்தார்.

 

இந்த தொடர் மீது புகார் அளித்திருந்த ராஜிவ் குமார் சின்ஹா, “ராகுல் காந்தியின் பதிவு எனது கண்களை திறந்துள்ளது.   பாரத ரத்னா ராஜிவ் காந்திஜியின் நாட்டுப் பற்றும் நாட்டுக்கு அவர் ஆற்றிய பணிகளும் இந்த சில்லறை தொடர்களால் அழிக்கக் கூடியவை அல்ல.   நான் நாட்டின் ஒற்றுமைக்காக காந்திஜியின் கொள்கைகளை பின்பற்றி இந்த புகாரை திரும்பப் பெற உள்ளேன்” என அறிவித்துள்ளார்.

இந்த தொடரில் புகழ்பெற்ற பாலிவுட் நடிகரான சைஃப் அலி கான் மற்றும் காலா புகழ் ராதிகா ஆப்தே ஆகியோர் நடிக்கின்றனர்.