துர்கா பூஜை நடக்கவில்லை என பொய் பேசுவதா ? அமித்ஷாவை கடுமையாக விமர்சித்த மம்தா பானர்ஜி

கொல்கத்தா:

பாஜக தேசியத் தலைவர் அமீத்ஷா அரைவேக்காடு மனிதர் என்றும், அவரை கழுதைக்கு நிகராக ஒப்பிட்டும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடுமையாக விமர்சித்துள்ளார்.


மேற்கு வங்காளம் மித்னாப்பூரில் நடந்த பேரணியில் பேசிய பாஜக தேசியத் தலைவர் அமீத்ஷா, மேற்கு வங்கத்தில் துர்கா பூஜை சிறப்பாக கொண்டாடுவதில்லை என்று கூறியிருந்தார்.

அதற்கு பதில் அளித்த திரிணாமூல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி, எனது ஓவியங்களை குறிப்பிட்ட சீட்டு கம்பெனி உரிமையாளர்களுக்கு விற்றதாக பிரதமர் மோடியும், அமீத்ஷாவும் அவதூறாக பேசி வருகின்றனர்.

இதை நிரூபிக்காவிட்டால் இருவர் மீதும் அவதூறு வழக்கு தொடருவேன். மேற்கு வங்கத்தில் துர்கா பூஜை கொண்டாடுவதில்லை என்று தவறான தகவலை அமீத்ஷா பரப்புகிறார்.

அவர் அரைவேக்காடு மனிதர் என்பதையும் கழுதைக்கு இணையான அறிவு இருப்பதையும்   இது காட்டுகிறது என்று ஆவேசமாக பதில் அளித்தார்.