பாஜக உள்ள வரை முக ஸ்டாலின் முதல்வர் ஆக முடியாது : பாஜக தேசிய செயலர்

சென்னை

மு க ஸ்டாலினால் பாஜக உள்ளவரைத் தமிழக முதல்வர் ஆக முடியாது என பாஜக தேசிய செயலர் முரளிதரராவ் கூறி உள்ளார்.

பாஜகவின் புதிய தேசிய தலைவரஜ ஜே பி நட்டா தேர்வு செய்யப்பட்டுள்ளார். அத்துடன் புதியதாக மண்டல நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்  இதையொட்டி சென்னை சாலிகிராமத்தில் பாஜகவினர் முப்பெரும் விழாவை நடத்தினர்.

இதில் ஜே பி நட்டாவுக்கு பாராட்டு, நிர்வாகிகள் அறிமுகம் மற்றும் குடியுரிமைச் சட்ட நிறைவேற்றத்துக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் ஆகியவை நிறைவேற்றப்பட்டது.   இந்த கூட்டத்தில் பாஜக தேசிய செயலர் முரளிதரராவ் கலந்துக் கொண்டார்.

அவர் தனது உரையில், “தற்போது ஈழத் தமிழர்களுக்குக் குடியுரிமை வழங்க வேண்டும் எனக் குரல் எழுப்புகிறார்.  ஆனால் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நேரத்தில் இலங்கையில் தமிழர்களுக்கு எதிராகப் போர் நடந்த போது அதைத் தடுக்க என்ன செய்தார்?  முக ஸ்டாலினால் பாஜக உள்ள வரை தமிழக முதல்வர் ஆக  முடியாது” எனக் கூறினார்.

மிழக அரசியல் வட்டாரத்தில் பாஜக தேசிய செயலாளர் முரளிதரராவி இவ்வாறு பேசியது பரபரப்பை உண்டாகி இருக்கிறது.

கார்ட்டூன் கேலரி