ஆன்லைன் கிளாசுக்கு செல்போன் இல்லை தற்கொலையில் 14 வயது மாணவி

கேரளா மாநிலம் மணப்புரத்தை சேர்ந்த தேவிகா என்னும் 9-ம் வகுப்பு மாணவி மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர்.   நேற்று ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்பட்ட நிலையில் தன்னிடம் ஸ்மார்ட் போன் இல்லாததால் வகுப்புகளில் கலந்து கொள்ள முடியாமல் போனதால் மிகவும் மனம் வெறுத்துப்போன நிலையிலிருந்த இவர் நேற்று வீட்டிலிருந்து 200 மீ தொலைவிலுள்ள ஒரு காலியிடத்தில் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து தற்கொலை செய்து கொண்டார்.

“வீட்ல டிவியும் வேலை செய்யல.  சாதாரண போன் தான் இருக்கு என்கிட்ட.  கிளாஸ் அட்டன் பண்ண முடிலனு ரொம்ப வருத்தத்தோட இருந்தா என் பொண்ணு.  சீக்கிரமாவே வேற டிவி வாங்கித்தரேன்னு சொல்லியிருந்தேன்.  அதுக்குள்ள இப்டி ஆகிடிச்சு” என்கிறார் அழுதபடியே தினக கூலியான அவர் தந்தை பாலகிருஷ்ணன்.

இறந்த இடத்தில் ‘நான் போகிறேன்’ என்று எழுதப்பட்ட கடிதத்தை போலீசார் கைப்பற்றியுள்ளனர். அப்பகுதி மாணவர்களுக்காக ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ள வசதி செய்து கொடுப்பது குறித்து முடிவு எடுக்க அந்த ஏரியாவினர் இன்று கூட்டம் நடத்த ஏற்பாடு செய்திருந்தநிலையில் இம்மாணவி எடுத்த அம்முடிவு

அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

– லட்சுமி பிரியா