பாஜக தொண்டர் கேள்வியால் தடுமாறிய மோடி

சென்னை

மோடி நடத்திய நேருக்கு நேர் விடியோ விவாதத்தில்  ஒரு பாஜக தொண்டர் எழுப்பிய கேள்வியால் மோடி தடுமாறி உள்ளார்.

நேற்று தமிழக  பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர்களுடன் மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் நேருக்கு நேர் நிகழ்வு ஒன்றை நடத்தினார்.    இந்த நிகழ்வில் தொண்டர்கள் கேட்க வேண்டிய கேள்விகள் குறித்து ஒரு வீடியோ பதிவு ஒன்று எடுக்கபட்டு  அதை பாஜக நிர்வாகிகள் தேர்வு செய்து மோடிக்கு நிகழ்வு நடப்பதற்கு 48 மணி நேரம் முன்பு அனுப்பி வைத்தனர்.

இந்த நிகழ்வில் ஒரு பாஜக தொண்டர் கடுமையான வரி விதிப்பால் நடுத்தர மக்கள் கடுமையாக அவதிப்படுவதாகவும் அதற்கு மத்திய அரசு என்ன செய்யப்போகிறது எனவும் கேள்வி எழுப்பி இருந்தார்.   இந்த கேள்வியால் மோடி சற்று தடுமாறி உள்ளதாக கூறப்படுகிறது .   அத்துடன் பிரதமர் மோடி இதனால் மிகவும் அதிருப்தி அடைந்துள்ளதாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ள்ன.

இது குறித்து பாஜக நிர்வாகி ஒருவர்,  “இது போல நேருக்கு நேர் நிகழ்ச்சிகளில் எப்போதாவது ஒரு சில தவறுகள் நேர்வது சகஜமான ஒன்றாகும்.  இந்த நிகழ்வில் 15 மாவட்டங்களை சேர்ந்த முக்கிய தொண்டர்கள் கலந்துக் கொண்டு கேள்விகளை எழுப்பி உள்ளனர்.    தவறுதலாக சில கேள்விகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.   எங்களுக்கு இது ஒரு பாடமாக அமைந்துள்ளது. “ என கூறி உள்ளார்.