மோடியின் பணமதிப்பிறக்க அறிவிப்பு தோல்வி: புழக்கத்தில் இருந்த 97% பணம் வங்கிக்கு திரும்பியது

டெல்லி:

பயன்பாட்டில் இருந்த பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்களில் 97 சதவீதம் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டு விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


புழக்கத்தில் இருந்த பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்களை செல்லாது என்று பிரதமர் மோடி கடந்த நவம்பர் 8ம் தேதி அறிவித்தார். மக்கள் தங்கள் கைவசம் உள்ள இந்த ரூபாய் நோட்டுக்களை டிசம்பர் 30ம் தேதிக்குள் வங்கிகளில் செலுத்தி விட வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டிருந்தார்.

இதன் மூலம் கள்ள ரூபாய் நோட்டுக்கள், கறுப்பு பணம் ஆகியவை ஒழிக்கப்பட்டுவிடும் என மோடி அறிவித்திருந்தார். ஆனால், தற்போது இதற்கான காலக்கெடு முடிந்த பிறகு பார்த்தால் புழக்கத்தில் இருந்த 97 ரூபாய் நோட்டுக்களும் வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுவிட்டது.
14.97 டிரில்லியன் பணம் கடந்த டிசம்பர் 30ம் தேதி வரை வங்கிகளில் டொபசிட் செய்யப்பட்டு விட்டது. 8 டிரில்லியன் புதிய ரூபாய் நோட்டுக்கள் அச்சடிக்கப்பட்டு புழக்கத்தில் விடப்பட்டுள்ளது. இதனால் கறுப்பு பணம என்ன ஆனது? என்பது கேள்விகுறியாகியுள்ளது.
இதன் மூலம் மோடியின் திட்டம் தோல்வியை சந்தித்துள்ளது. லஞ்சம், ஊழலை ஒழிக்கிறேன் என்று கூறி அறிவிக்கப்பட்ட இந்த பணமதிப்பிறக்கத்தால், பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்பட்டது. மக்கள் வங்கிகள் முன் நீண்ட வரிசையில் காத்திருந்தது தான் மிச்சம்.
பிரதமருக்கு மோசமான ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது. அதனால் இந்த சூழ்நிலையை சமாளிக்க அரசு தயார் நிலையில் இல்லாமல் போய்விட்டது. எதிர்வரும் மாநில தேர்தல்களை கணக்கில் கொண்டு, ஊழலுக்கு எதிரான அரசு என்று மார்தட்டிக் கொள்ளலாம் என்ற மத்திய அரசின் எதிர்பார்ப்பு பொய்த்துவிட்டது.

கார்ட்டூன் கேலரி