ஐ எல் எஃப் எஸ் நிறுவனம் அரசுடமை ஆக தேசிய நிறுவன சட்டத் தீர்ப்பாயம் ஒப்புதல்

டில்லி

திவாலாகும் நிலையில் உள்ள ஐ எல் எஃப் எஸ் நிறுவனத்தை அரசுடமை ஆக்க தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் ஒப்புதல் அளித்துள்ளது.

இன்ஃப்ராஸ்டிரக்சர் லீசிங் அண்ட் ஃபைனான்சியல் சர்வீசஸ் லிமிடெட் நிறுவனம் சுருக்கமாக ஐ எஸ் எஃப் எல் என அழைக்கப்படுகிறது.    இந்த நிறுவனம் சாலைகள், ரெயில்வே பாதைகள், துறைமுகங்கள், விமான நிலையங்கள் எண்ணெய் கிணறுகள் என பல உள்கட்டமைப்பை அமைத்துள்ளது.  இந்த நிறுவனத்தின் சொத்துக்களின் மதிப்பு ரூ.6950.19 கோடி ஆகும்.

இந்த நிறுவனம் வழங்கிய கடன்களை திரும்ப பெறாததால் இந்த நிறுவனம் வாங்கிய கடன்களை திரும்ப செலுத்த முடியாத நிலையில் உள்ளது.  எனவே நிறுவனம் தற்போது திவாலாகும் நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது.   மத்திய அரசு தற்போது உட்கட்டமைப்பு திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்து வருவதால் இந்த நிறுவனத்தை அரசுடமை ஆக்க தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்திடம் அனுமதி கோரியது.

அதற்கு தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் ஒப்புதல் அளித்துள்ளது.  தீர்ப்பாயம் தெரிவித்த படி இயக்குனர்களை மாற்ற அரசு ஒப்புக் கொண்டுள்ளது.   புதிய இயக்குனர்களை வரும் அக்டோபர் 6 க்குள் அரசு அறிவிக்கும் என தெரிய வந்துள்ளது.   தேர்ந்தெடுக்கப்படும் இயக்குனர்கள் கூஉட்டம் வரும் அக்டோபர் 8 ஆம் தேதி கூட உள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.