கொரோனா டெஸ்ட் கேட்டதால் விபரீதம்.. குடும்பத்தோடு குத்திக்கொலை..

கொரோனா டெஸ்ட் கேட்டதால் விபரீதம்.. குடும்பத்தோடு குத்திக்கொலை..

மத்தியப்பிரதேச மாநிலம் பிந்த் பகுதியைச் சேர்ந்த ராஜ்னுகான் என்ற ரவுடி டெல்லியில் வசித்து வந்தான்.

கொரோனா அச்சத்தால் சொந்த ஊருக்குத் திரும்பி இருந்தான்.

பக்கத்து வீட்டில் வசிக்கும் விஷ்ணு ஜாதவ் என்பவரும், அவரது உறவு பெண் கலாதேவியும், ‘கொரோனா பரிசோதனை செய்த பின்பே உன் வீட்டுக்கு வர வேண்டும் எனக் கூறியுள்ளனர்.

‘’ நான் ஏற்கனவே டெல்லியில் பரிசோதனை செய்து கொண்டேன்’’ என அவன் தெரிவித்துள்ளான்.

விஷ்ணுவும், கலாவும் அதனை நம்பவில்லை.

‘மீண்டும் பரிசோதனை செய்தே தீரவேண்டும்’’ என்று வலியுறுத்தியுள்ளனர்.

ஆத்திரம் அடைந்த ராஜ்னு, தன் உறவினர்கள் சிலருடன் சேர்ந்து விஷ்ணுவையும், கலாவையும் குத்திக்கொன்றுள்ளான்.

பின்னர் அவர்கள் வீட்டை வெளிப்புறமாகப் பூட்டி விட்டுத் தப்பி ஓடிவிட்டனர்.

தப்பிய குற்றவாளிகள் அத்தனைப்பேரையும் போலீசார் தேடி வருகிறார்கள்.

– ஏழுமலை வெங்கடேசன்