ஆம்புலன்ஸ் வராததால் மருத்துவமனைக்கு நடந்து சென்ற பொள்ளாச்சி நகராட்சி ஊழியர்கள் மீது வழக்கு

பொள்ளாச்சி

கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் வராததால் நடந்து சென்ற நகராட்சி ஊழியர்கள் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.

கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு பொள்ளாச்சி நகராட்சி பெண் பொறியாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையொட்டி ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை நடந்தது.

இதில் ஏற்கனவே 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆனது.

நேற்று குடிநீர் வழங்கல் பிரில் மூவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

அவர்களை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் வரவில்லை.

இதனால் வேறு வழியின்றி அவர்கள் மருத்துவமனைக்கு 1 கிமீ தூரம் நடந்து  சென்றுள்ளனர்.

இந்த அவலம் ஒருபுறம் இருக்க மற்றொரு கொடுமையும் நடந்துள்ளது.

இவர்கள் கொரோனாவை பரப்பும் வகையில் நடந்து சென்றதாக இவர்கள் மூவர் மீதும் காவல்துறை வழக்குப் பதிந்துள்ளது.

கார்ட்டூன் கேலரி