சென்னை

ள்ளாட்சி தேர்தல் நடக்காததால் உறுப்பினர்கள் இல்லாத நிலையில் அதிகாரிகள் முடிவு எடுத்து வருகின்றனர்.

தமிழக்த்தில் உள்ளாட்சி தேர்தல்கள் கடந்த மூன்று வருடங்களுக்கும் மேலாக நடைபெறாமல் உள்ளது. உள்ளாட்சி உறுப்பினர்கள் அந்தந்த பகுதிகளில் உள்ள மக்களை சந்தித்து குறைகளை தெரிந்துக் கொள்வது வழக்கமாகும். அத்துடன் அந்த குறைகளை அவர்கள் அதிகாரிகள் மூலம் சரி செய்வதும் பல முக்கியமான முடிவுகளை உள்ளாட்சி கூட்டங்களில் பேசி முடிவெடுப்பதும் அவர்கள் கடமையாகும்.

குறிப்பாக வரிகள் உயர்த்துவது, புதிய வரிகள் போன்ற முடிவுகளை உள்ளாட்சி உறுப்பினர்கள் கூட்டத்தில் பேசி முடிவு எடுப்பது வழக்கமாகும். தற்போது இந்த நிலை இல்லாததால் மக்கள் மிகவும் துயருற்று வருகின்றனர்.  கடந்த வருடம் சொத்து வரி உயர்த்தப்பட்டது.  சொத்து வரி குறைந்த பட்சமாக 50% மட்டுமே உயர்த்தப்படும் என்னும் வாக்குறுதிக்கு மாறாக 600% வரை பல இடங்களில் வரி உயர்த்தப்பட்டது.

இது குறித்து மக்கள் முறையிட உள்ளாட்சி உறுப்பினர்கள் இல்லாத நிலை உள்ளது. எனவே பல குடிமக்கள் இந்த வரி உயர்வை எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கு நிலுவையில் உள்ள போதே குடிநீர் வாரிய வரியும் உயர்ந்துள்ளது

இவ்வாறு உயர்த்தப்பட்ட வரிகளை உடனடியாக செலுத்த வேண்டும் எனவும் தவறினால் குடிநீர் விநியோகம் துண்டிக்கப்படும் எனவும் அதிகாரிகள் கூறி வருகின்றனர். மொத்த்த்தில் தற்போது குடியாட்சிக்கு பதில் அதிகாரிகள் ஆட்சி தான் நடந்து வருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.