தூத்துக்குடி

றுதிச் சடங்கு செய்யப் பணமில்லாத ஏழை அர்ச்சகர் தனது  தாயின் சடலத்தைக் குப்பைத் தொட்டியில் போட்டுள்ளார்.

தூத்துக்குடி நகரில் வசிக்கும் வசந்தி என்னும் பெண்மணி 60 ,வயதானவர்,ஆவார். அவருடைய மணமாகாத மகன் முத்து லட்சுமணன் என்பவருடன் இவர் வசித்து வந்தார். வசந்தியின் கணவர் சென்னையில் ஒரு விடுதியில் உள்ளார். முத்து லட்சுமணன் உள்ளூர் கோவிலில் அர்ச்சகராகப் பணி புரிந்து வந்துள்ளார். அவர்கள் இருவரும் கடும் வறுமையில் வாடி வந்தனர். சரியாகச் சாப்பிடாததால் வசந்தி எலும்பும் தோலுமாகக் காணப்பட்டார்.

பசி மற்றும் பட்டினியால் அவருடைய உடல்நிலை மிகவும் சீர் கெட்டது. கடந்த ஞாயிற்றுக்கிழமை வசந்தி அவர் வீட்டில் இறந்து கிடந்துள்ளார். அவருக்கு இறுதிச் சடங்கு செய்யக் கூட அவர் மகனிடம் பணமில்லை. எனவே அவர்  தாயின் சடலத்தை ஒரு பெட்சீட்டில் சுற்றி அருகில் இருந்த குப்பைத் தொட்டியில் போட்டுள்ளார். அவர் தனது தாயின் சடலத்தை நகராட்சி ஊழியர்கள் அடக்கம் செய்வார்களென எதிர்பார்த்துள்ளார்

ஆனால் நகராட்சி ஊழியர் அடக்கம் செய்ய உள்ளூர் காவல்துறை மற்றும் நகராட்சியிடம் தெரிவிக்க வேண்டும் என்பதை அவர் அறியவில்லை. காவல்துறையினர் வசந்தியின் சடலத்தை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் இது குறித்து சந்தேகத்துக்குரிய மரணம் என வழக்கு பதியப்பட்டது. அதன் பிறகு அர்ச்சகரிடம் அவர் தாயின் சடலம் ஒப்படைக்கப்பட்டது.

இதற்குள் இது குறித்து விவரம் அறிந்து அங்கு வந்த அர்ச்சகரின் இனத்தைச் சேர்ந்த சிலர் இறுதிச் சடங்குக்கூதவி உள்ளனர். இது குறித்து தூத்துக்குடி  காவல்துறை சூப்பிரண்ட் அருண் பாலகோபாலன், “இந்த பெண்மணியின் மரணம் குறித்து பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகுதான் நிச்சயமாகத் தெரிய வரும. ஆயினும் இந்தப் பெண்மணி பசி மற்றும் பட்டினியால் மரணம் அடைந்திருக்கலாம் எனத் தோன்றுகிறது.” எனத் தெரிவித்துள்ளார்.