கருப்புப் பணம் ரொக்கமாக இருக்காது : பொருளாதார நிபுணர் தகவல்

டில்லி

ருப்புப் பணத்தை யாரும் ரொக்கமாக வைத்திருக்க மாட்டார்கள் பணமதிப்பிழப்பு நடவடிக்கை தோல்வி அடைந்துள்ளதாக பிரபல பொருளாதார நிபுணர் பிரணாப் சென் தெரிவித்துள்ளார்.

பணமதிப்பிழப்பு நடவடிக்கை என்பது கருப்புப் பண ஒழிப்புக்கான நடவடிக்கை என அரசு கூறி வருகையில் ரிசர்வ் வங்கி வெளியிட்ட தகவலின்படி அப்போது புழக்கத்தில் இருந்த ரூபாய் நோட்டுக்களில் 99.3% நோட்டுக்கள் வங்கிக்கு திரும்ப வந்துள்ளன.  இதன் மூலம் 1% குறைவான அளவிலேயே கருப்புப் பணம் இருந்திருக்கலாம் என பலரும் கூறி வருகின்றனர்.

இந்நிலயில் முன்னாள் புள்ளி விவர இயக்குனரும் பிரபல பொருளாதார நிபுணருமான பிரணாப் சென், “பணமதிப்பிழப்பு நடவடிக்கை தோல்வி அடைந்ததாக எதிர்க்கட்சிகளும் வெற்றி அடைந்ததாக ஆளும் கட்சியினரும் தெரிவிக்கின்றனர்.   ஆனால் அந்த சமயத்தில் மக்கள் அடைந்த துயரமும் துன்பமும் ஈடு செய்ய முடியாது.

அத்துடன் அந்த சமயத்தில் ரூ. 3 லட்சம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.   ஆனால் ரூ. 13000 கோடி அளவில் நோட்டுக்கள் மதிப்பிழந்துள்ளன.   அதே நேரத்தில் நேப்பாளம்,பூட்டான், வங்கதேசம், பர்மா ஆகிய நாடுகளில் இந்த நோட்டுக்கள் மாற்றப் படாமல் தங்கி இருக்க வாய்ப்புண்டு.

பணப்புழக்கத்தை பற்றி தெரிந்த அனைவருமே கருப்புப் பணம் ரொக்கப் பணமாக வைத்துக் கொள்ள மாட்டார்கள் என்பதை அறிந்திருப்பார்கள்.   மிக மிக குறைந்த அளவிலான கருப்புப் பணம் மட்டுமே ரொக்கமாக இருந்திருக்கும்.    அதனால் இந்த நடவடிக்கை தோல்வி அடைந்துள்ளது.   மேலும் இவ்வளவு தொகை நிச்சயம் வங்கிகளுக்கு வந்து சேரும் என்பதும் பலரும் எதிர்ப்பார்த்தது.” என தெரிவித்துள்ளார்.