டில்லி

ன்று மாலை வரை 1,08,38,323 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

உலக அளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது.  இங்கு இதுவரை 1.09 கோடிக்கு மேல் பாதிக்கப்பட்டு 1.56 லட்சம் பேர் உயிர் இழந்துள்ளனர்.  கடந்த 16 ஆம் தேதி முதல் இந்தியாவில் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது.

இதில் முதல் கட்டமாகச் சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.   அத்துடன் கொரோனா முன்களப் பணியாளர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.   அடுத்ததாக முதியோருக்கு கொரோனா தடுப்பூசி  போடப்பட உள்ளது.

இன்று மாலை 6 மணி வரை இந்தியாவில் 1,08,38,323 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.  இதில் சுகாதாரப்பணியாளர்கள் 72,26,653 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.,   முதல் டோஸ் தடுப்பூசி 63,52,713 பேருக்கும் இரண்டாம் டோஸ் தடுப்பூசி 8,73,940 பேருக்கும் போடப்பட்டுள்ளது.