பாக் பிரதமர் நவாஸ் ஷெரிஃப் : மூடப்பட்ட 15 வழக்குகள் மறு விசாரணை

ஸ்லாமாபாத்

னாமா பேப்பர் ஆவணம் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் குடும்பத்தினர் இங்கிலாந்து தீவில் முறைகேடாக சொத்து குவித்துள்ளதாக வெளியிட்டு இருந்தது.  அதில் குறிப்பிட்டுள்ள தகவலின் படி மூடப்பட்ட 15 வழக்குகள் மறுவிசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன.

பனாமா பேப்பர் ஆவணம் வெளியிட்ட தகவலை கூட்டு ஆய்வுக் குழு ஆராய்ந்து உச்சநீதி மன்றத்துக்கு அறிக்கை அளித்துள்ளது.   அதன்படி, ஏற்கனவே மூடப்பட்ட 15 வழக்குகளை மறு விசாரணை செய்ய உச்சநீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.  மேலும் ஷெரிஃப் மற்றும் அவரின் மக்கள் வாழும் வாழ்க்கை தரத்துக்கும், தெரிவிக்கப்பட்டுள்ள வருமானத்துக்கும், பெரும் வித்தியாசம் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.   இவ்வளவு குறைவான வருமானம் ஈட்டுபவர்கள் இவ்வளவு வசதியான வாழ்க்கை வாழ்வது சாத்தியமே இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆய்வுக்குழு மறு விசாரணைக்கு சிபாரிசு செய்துள்ள 15 வழக்குகளில் 1994 மற்றும் 2011 ல் மூன்று வழக்குகளும், 12 வழக்குகள் முன்னாள் பிரதமர் பர்வேஸ் முஷரஃப் ஆட்சிக்காலத்திலும் பதிவு செய்யப்பட்டவை.

இது குறித்து உச்ச நீதி மன்றம் விரைவில் நவாஸ் ஷெரிஃபுக்கு நோட்டிஸ் அனுப்பும் என தெரிய வருகிறது.

ஏற்கனவே பத்திரிகை. காம் இது குறித்து வெளியுட்டுள்ள செய்தியின் லின்க் இதோ

https://patrikai.com/pakistan-prime-minister-nawaz-sharif-resign/