சிபிஐ இயக்குனரை நீக்க அரசுக்கு அதிகாரம் உள்ளதா ? ஒரு சட்ட விளக்கம்

டில்லி

ரசின் மிகவும் அதிகாரம் பெற்ற சிபிஐ இயக்குனரை நீக்க அரசுக்கு அதிகாரம் உள்ளதா என்பதை குறித்த சட்ட விளக்கம் இதோ

சிபிஐ இயக்குனர் அலோக் வர்மா மற்றும் சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா ஆகியோரிடையே கடும் மோதல் ஏற்பட்டது. இந்த சமயத்தில் ராகேஷ் அஸ்தானா ஒரு வழக்கில் லஞ்சம் வாங்கியதாக வழக்கு பதியப்பட்டது. அத்துடன் தனது விசாரணைகளில் அலோக் வர்மா தேவையின்றி தலையிடுவதாக ராகேஷ் புகார் அளித்துள்ளார். இதை ஒட்டி மத்திய அரசு இருவரையும் விடுப்பில் செல்ல உத்தரவிட்டுள்ளது.

சிபிஐ இயக்குனர் அலோக் வர்மாவை மத்திய கண்காணிப்புத் துறை பரிந்துரையின் அடிப்படையில் விடுப்பில் செல்ல மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு விடுப்பில் செல்ல உத்தரவிடுவது என்பது நீக்குவதற்கு முதல் படி என்பது அரசு வழக்கமாகும். சிபிஐ இயக்குனரை நீக்க மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளதா என்பது குறித்த சட்ட விளக்கத்தை இங்கு காண்போம்.

ராகேஷ் ஆஸ்தானா வழக்கில் விசாரணை செய்து வந்த அதிகாரிகள் குழு அலோக் வர்மாவுக்கு மிகவும் நெருக்கமானவர்கள் என்பதால் அரசு அந்தக் குழுவில் உள்ளவர்களை இடமாற்றம் செய்ததாக கூறப்படுகிறது. இந்த நிகழ்வும் அலோக் வர்மா விடுப்பில் செல்ல உத்தரவிடப்பட்டதும் பல கேள்விகளை எழுப்பி உள்ளது.

ஆனால் சட்டப்படி மத்திய கண்காணிப்புத் துறையின் பரிந்துரையை சிபிஐ இயக்குனர் விவாரத்தில் கேட்பதற்கும் சிபிஐ இயக்குனரை விடுப்பில் அனுப்புவதற்கும் அரசுக்கு உரிமை இல்லை என்பதே உண்மை ஆகும்.

இரண்டு வருடம் பணிக்காலத்தில் உள்ள சிபிஐ இயக்குனரை பணி நீக்கம் செய்ய மற்றும் அவர் பொறுப்புக்களை மற்றவருக்கு மாற்ற அரசுக்கு அதிகாரம் இல்லை என 1998 ஆம் வருடம் ஒரு வழக்கில் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மிகவும் தவிக்க முடியாத நேரத்தில் இயக்குனரின் முக்கிய பொறுப்புக்களை மற்றவரிடம் தேர்வு குழுவின் ஒப்புதலுடன் மாற்றி அமைக்க மட்டுமே அரசுக்கு அதிகாரம் உண்டு எனவும் அந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது

அலோக் வர்மா விவகாரத்தில் அவரை நேற்று காலை முதல் விடுப்பில் செல்ல அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் அதற்கு செவ்வாய் அன்று தேர்வுக்குழுவைக் கூட்டி அரசு இது குறித்து விவாதித்து இருக்க வேண்டும். ஆனால் அதுபோல எதுவும் நடந்ததாக தெரியவில்லை. மேலும் குறிப்பிட்ட பதவிக் கால வரம்பில் சிபிஐ இயக்குனர் உள்ளதால் அவரை சரியான விசாரணை இன்றி நீக்கவோ, விடுப்பில் போகச் சொல்ல்வோ சட்டப்படி அரசுக்கு அதிகாரம் இல்லை.

நன்றி : THE PRINT