தற்போதைய செய்தி : திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை சீராக உள்ளது

சென்னை

ற்போதைய நிலவரப்படி திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை சீராக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதுமை காரணமாக உடல்நிலை சரியில்லாமல் போன திமுக தலைவர் மு கருணாநிதி காவேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில்  அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.    நேற்று இரவு அவருடைய உடல்நிலையில் சற்று பின்னடைவு ஏற்பட்டதை ஒட்டி அவருக்கு சிகிச்சைகள் மேலும் தீவிரமாக்கப்பட்டது.

அதன் பிறகு அவர் உடல்நிலை சீரானதாக மருத்துவமனை அறிவித்தது.   காவேரி மருத்துவமனை வாயிலில் திமுக தொண்டர்கள் குழுமி உள்ளனர்.   அந்தப் பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

இன்று காலை 8.20 க்கு கிடைத்த தகவலின் படி கருணாநிதியின் உடல் நிலை சீராகவே உள்ளது எனவும் அவருடைய உடலின் முக்கிய உறுப்புக்களின் செயல்பாடுகள் திருப்திகரமாக உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.   அவருடைய ரத்த அழுத்தம் இயந்திர உதவி இன்றி கட்டுக்குள் உள்ளதாகவும் அந்த தகவல் தெரிவிக்கிறது.