கொரோனா : தனியார் மருத்துவமனைகள் இயங்காததால் அரசு மருத்துவமனைகளில் அதிகரிக்கும் மகப்பேறு

கோயம்புத்தூர்

கொரோனா அச்சத்தால் தனியார் மருத்துவமனைகள் இயங்காததால் கோவை அரசு மருத்துவமனையில் ஒரே மாதத்தில் 930 மகப்பேறு நிகழ்ந்துள்ளது.

மார்ச் மாதம்  முதல் தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்த தொடங்கியது.   இதனால் மத்திய மாநில அரசுகள்  கர்ப்பிணிப் பெண்கள் கவனத்துடன் இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்தன.  அதே வேளையில் கொரோனா அச்சம் காரணமாகப் பல தனியார் மருத்துவமனைகள் இயங்கவில்லை.

அதே வேளையில் இயங்கிய மருத்துவமனைகளிலும் கர்ப்பிணிப் பெண்களை அனுமதிக்க மறுப்பு தெரிவிக்கப்பட்டது.  தமிழகத்தின் பெரிய நகரங்களில் ஒன்றான கோவையில் இது போலப் பல தனியார் மருத்துவமனைகளில் கர்ப்பிணிகளை அனுமதிக்க மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ள்து.

இதையொட்டி கோவை அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிப்  பெண்கள்  அதிக அளவில் சிகிச்சைக்கு வரத் தொடங்கினர்.  இங்கு மார்ச் மாதம் 670 மகப்பேறு நிகழ்ந்துள்ளன.  இது ஏப்ரல் மாதம் 815 ஆக அதிகரித்து மே மாதம் 930 ஆகி உள்ளது.  இது இந்த மருத்துவமனை வரலாற்றில் முதல் முறையாகும்