சென்னை

சென்னை மாநகர போக்குவரத்து தொழிலாளர்கள் ஊதியம் வழங்காததால் வேலை நிறுத்த போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மாநகர போக்குவரத்து கழஜ ஊழியர்களுக்கு ஒவ்வொரு மாத ஊதியமும் அந்த மாதத்தின் கடைசி வேலை தினத்தன்று வழங்கப்படுவது வழக்கமாகும். ஆனால் ஜூன் மாத ஊதியம் இதுவரை வழங்கப்படாமல் உள்ளது. இதனால் அதிருப்தி அடைந்த போக்குவரத்து துறை ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் இன்று காலை முதல் பேருந்துகளை இயக்கவில்லை.

சென்னை மாநகரில் அம்பத்தூர், ஆவடி, பட்டபிராம், அண்ணா நகர் உள்ளிட்ட பல பனிமனைகளிலும் இருந்து பேருந்துகள் காலையில் எடுக்கப்படவில்லை. இந்த வேலை நிறுத்தம் மற்ற பணிமனைகளிலும் பரவி உள்ளது. இதனால் நகரில் பேருந்துகள் இயங்கவில்லை.

விடிகாலையில் ஆரம்பித்த இந்த வேலை நிறுத்தத்தினால் வெளியூரில் இருந்து வரும் மக்கள் மிகவும் துயருற்று உள்ளனர்.  இன்று வாரத்தின் முதல் நாள் ஏன்பதால் பள்ளி, கல்லூரி மாணவர்களும், பணிக்கு செல்வோரும் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.

பலரும் மின்சார ரெயிலை நாடுவதால் ரெயில்களிலும் ஏராளமான கும்பல் உள்ளது. இது குறித்து போக்குவரத்து ஊழியர் ஒருவர் சென்ற மாத ஊதியத்தில் சுமார் 2/3 பங்கு மட்டுமே வழங்கப்பட உள்ளதாகவும் இதனால் தாங்கள் பணியை தொடங்கவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

ஊழியர் பிரதிநிகளுடன் தற்போது பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.