டிரம்புக்கு கொரோனா : இரண்டாம் விவாதத்தில் கலந்துக் கொள்ள ஜோ பிடன் மறுப்பு

வாஷிங்டன்

டிரம்புக்கு இன்னும் கொரோனா உள்ளதால் அவருடன் இரண்டாம் விவாதத்தில் கலந்துக் கொள்ள ஜனநாயக  கட்சி வேட்பாளர் ஜோ பிடன் மறுத்துள்ளார்

நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டிரம்ப் மற்றும் ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பிடன் ஆகியோர் போட்டி இடுகின்றனர்.   தேர்தல் பிரச்சாரத்தின் ஒர் பகுதியாக இரு வேட்பாளர்களும் விவாதம் செய்ய வேண்டியது அமெரிக்க விதி முறையாகும்  அதன்படி முதல் கட்ட விவாதம் செப்டம்பர் 29 அன்று நடந்தது.

இரண்டாம் கட்ட விவாதம் மியாமியில் அக்டோபர் 15 ஆம் தேதி அன்றும் இறுதிக்கட்ட விவாதம் அக்டோபர் 22 ஆம் தேதி அன்று டென்னிஸ் நாஷ்விலே விலும் நடைபெற உள்ளன.  இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளார்.

அவரிடம் இருந்து கொரோனா தொற்ற இன்னும் வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதையொட்டி ஜோ பிடன், “தற்போது உலகெங்கும் பலர் கொரோனாவால் பாதிக்கபட்டுளன்ர்.  இது ஒரு தீவிரமான பிரச்சினை ஆகும்.  எனவே நான் கிளீவ்லாந்து கிளினிக் மருத்துவர்கள் கூறும் வழிமுறைகளைப் பின்பற்றுகிறேன்.  அவர்கள் தற்போது டிரம்பை சந்திப்பது சரி அல்ல எனக் கூறி உள்ளனர்.

அதிபர் டிரம்ப் உடல் நிலை குறித்து என்னால் நிச்சயமாக ஏதும் சொல்ல முடியாது.  எனக்கு அது பற்றித் தெரியாது.   நான் அவருடன் விவாதம் செய்யத் தயாராக உள்ளேன்.  ஆனால் அவருக்கு கொரோனா பாதிப்பு இன்னும் உள்ளதாக மருத்துவர்கள் கூறும் போது என்னால் இரண்டாம் கட்ட விவாதத்தில் கலந்துக் கொள்ள இயலாத நிலையில் இருக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.