செல்போன் நிறுவனங்கள் தடுமாற்றம்……தொலைத்தொடர்பு துறையில் வேலையிழப்பு இரட்டிப்பாகும்

டில்லி:

ஒவ்வொரு தொலைத் தொடர்பு வட்டத்திலும் செல்போன் நிறுவனங்கள் மூடப்பட்டு வருவதால் கடந்த ஒன்றரை ஆண்டில் பல ஆயிரம் பேர் வேலையிழந்துள்ளனர். 2 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு தொலைத் தொடர்பு வட்டத்துக்கு சரசரியாக 10 செல்போன் ஆபரேட்டர்கள் இருந்தனர். இந்த எண்ணிக்கை தற்போது 6 என்ற கணக்கில் குறைந்துள்ளது.

2018ம் ஆண்டில் முதல் 2 அல்லது 3 காலாண்டுகளுக்குள் 80 ஆயிரம் முதல் 90 ஆயிரம் பேர் வரை வேலையிழக்கும் நிலை ஏற்படும் என்று மனித மேம்பாட்டு துறை நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இதேகாலகட்டத்தில் 2017ம ஆண்டில் 40 ஆயிரம் பேர் வேலையிழந்தனர். தற்போது இதன் எண்ணிக்கை இரட்டிப்பாகும் அபாய் ஏற்பட்டுள்ளது.

நிறுவனங்கள் இணைப்பு, கையகப்படுத்துதல், சில நிறுவனங்கள் மூடல் போன்ற காரணத்தால் வேலையிழப்பு அதிகரிக்கும் நிலைய ஏற்பட்டுள்ளது. வோடபோன், ஐடியா இணைந்து நாட்டின் பெரிய மொபைல் நிறுவனத்தை உருவாக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இதன் மூலம் 5 ஆயிரம் பேர் வேலையிழக்கும் நிலை உருவாகியுள்ளது. டெலினார், டாடா டெலி சர்வீஸ் ஆகியவற்றை கையகப்படுத்தும் நடவடிக்கையில் ஏர்டெல் ஈடுபட்டுள்ளது.

இது முடிவுகள் தொடர்பாக ஏர்டெல், டாடா டெலிசர்வீஸ், ஐடியா செல்லுலார் போன்ற நிறுவனங்களிடம் இ.மெயில் மூலம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதலளிக்கப்படவில்லை.

எனினும் வோடபோன் செய்திதொடர்பாளர் ஒருவர் கூறுகையில், ‘‘இணைப்பு நடவடிக்கையில் பணியாளர்கள் தொடர்பாக எவ்வித முடிவும் இது வரை எடுக்கப்படவில்லை. அதிகளவில் வேலையிழப்பு ஏற்படும் என்ற தகவலில் உண்மையில்லை. வோடபோன், ஐடியா இணைப்புக்கு இன்னும் ஒப்புதல் கிடைக்கவில்லை. அதனால் இரு நிறுவனங்களும் தனித்தனியான தலைமையின் கீழ் தான் செயல்பட்டு வருகிறது’’ என்றார்.