83வது பிறந்தநாள்: தலாய்லாமா பிறந்த ஊரில் சீனா போலீஸ் குவிப்பு

திபெத்திய புத்த மதத் தலைவர் தலாய் லாமாவின் பிறந்தநாள் விழா கொண்டாடத்தை தடுக்கும் வகையில், அவர் பிறந்த  பகுதியான  திபெத்தின்   அமொட பகுதியில் சீன அரசு காவல்துறை யினரை குவித்து உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புத்தமத தலைவரான தலாய்லாமா திபெத் நாட்டை சேர்ந்தவர். திபெத்தை தனி நாடாக அங்கீகரிக்க கோரி  பல ஆண்டுகளாக சீனாவுக்கு கோரிக்கை  விடுத்து வருகிறார். அவரது கோரிக்கையை சீனா நிராகரித்து வருகிறது. திபெத் சீனாவின் ஒரு பகுதி என்று அறிவித்து உள்ளது.

கடந்த 1959-ம் ஆண்டு  திபெத் மீதான சீனாவின் அத்துமீறல்களை எதிர்த்து, ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன் நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவின் இமாச்சலப் பிரதேச மாநிலம் தர்மசாலாவில் தஞ்சம் புகுந்தார். அது முதல் இந்தியாவில் தான் இருந்து வருகிறார். இந்தியா வந்து 60 ஆண்டுகள் நிறைவடைய உள்ளது.

இதையொட்டி அவரது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட  திபெத் மக்கள் முடிவு செய்திருப்ப தாக கூறப்படுகிறது. அங்கு பல்வேறு புத்த மதத்தினர் சில நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன் காரணமாக தலாய் பிறந்த இடமான திபெத் அமொட பகுதியில் சீனா காவல்துறையினர் குவிக்கப்பட்டு உள்ளனர். அவர் குறித்த செய்திகள் பரவாதவாறு சமூக வலைதளங்களும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இது அவரது ஆதரவாளர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.