அனுபம் கேர் தேர்தல் பேரணியை கூட்டம் வராததால் பாஜக ரத்து செய்தது

ண்டிகர்

பிரபல பாலிவுட் நடிகர் அனுபம் கேர் கலந்துக் கொள்ள இருந்த தேர்தல் பேரணியை கூட்டம் வராததால் பாஜக ரத்து செய்தது.

பிரபல பாலிவுட் நடிகர் அனுபம் கேர் மற்றும் அவர் மனைவி கிரண் கேர் ஆகிய இருவரும் பாஜகவில் உள்ளனர். கிரண் கேர் தற்போது நடந்து வரும் மக்களவை தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட உள்ளார். தனது மனைவிக்கு தேர்தல் பிரசாரம் செய்ய நடிகர் அனுபம் கேர் சண்டிகர் நகருக்கு வந்துள்ளார். இவர் நேற்று இரவு இரு தேர்தல் பேரணிகளில் கலந்துக் கொள்வதாக இருந்தது.

அவருடைய முதல் பேரணி நேற்று மாலை 4 மணிக்கு சண்டிகர் நகரில் செக்டர் 28 சி பகுதியில் உள்ள குடியிருப்பில் ஏற்பாடு செய்யபட்டிருந்தது. அந்த கட்சிக்கு பல முக்கிய தலைவர்களும் ஊடகங்களும் வர முடியாத நிலை ஏற்பட்டதால் அந்த பேரணி ரத்து செய்ய்யப்படுவதாக பாஜக அறிவித்தது. இது குறித்து பேரணி அமைப்பாளர் பந்தல் அமைப்பதற்கான உபகரணங்கள் வராததால் பேரணி ரத்து செய்யப்படுவதாக தெரிவித்தார்.

ஆனால் உண்மையில் இந்த பேரணிக்கு கூட்டம் வரவில்லை என்பதால் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கட்சி தொண்டர்கள் தெரிவித்துள்ளனர். அதை அனுபம் கேருக்கு தெரிவிக்காததால் அவர் தனது காரில் வந்து ஜன்னல் வழியே பர்த்த போது அந்த மைதானத்தில் யாரும் இல்லாத நிலையை கண்டுள்ளார். அப்போது மணி ஐந்து ஆகியும் ஒருவரும் வராததால் அவரிடம் பேரணி ரத்து செய்ப்படுவதாக தெரிவீக்கப்பட்டுள்ளது.

மற்றொரு பேரணி அறிவிக்கப்பட்ட நேரமான மாலை 6 மணிக்கு சரியாக தொடங்கியது. ஆயினும் அந்த பேரணியில் மொத்தம் 50 பேர் கூட கலந்துக் கொள்ளாததால் பாஜக தலைவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மொத்தம் 2000 பேர் வ்ருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மிகவும் குறைந்த அளவில் மக்கள் வந்துள்ளனர்.

தனது தேர்தல் பிரசாரத்தின் ஒரு பகுதியாக ஊர்வலம் ஒன்றில் அனுபம் கேர் கலந்துக் கொண்டார். அவர் ஒரு புகழ்பெற்ற நடிகர் என்பதால் அவரைக் காண கூட்டம் வந்துள்ளது. அவருடைய ஆட்டோகிராஃப் வாங்க பலரும் அலை மோதினர். அத்துட்ன் அவருடன் செல்ஃபி எடுத்துக் கொள்வதிலும் மக்கள் ஆர்வம் காட்டினர் அவர் உரையாற்ற ஆரம்பித்ததும் கூட்டம் கலைய தொடங்கி உள்ளது.

கார்ட்டூன் கேலரி