ண்டன்

ங்கிலாந்து நாட்டு சுகாதார அமைச்சர் நாடின் டோரிஸ் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதால் பல பிரமுகர்களிடம் பரிசோதனை நடந்து வருகிறது

சீனாவின் வுகான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று உலகெங்கும் மிகவும் வேகமாகப் பரவி வருகிறது.  சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி, தென்கொரியா, ஈரான் உள்ளிட்ட பல நாடுகளிலும் கொரோனா வைரஸ் தாக்குதல் அதிக அள்வில் உள்ள்து.  அவ்வகையில் இங்கிலாந்திலும் இந்த வைரஸ் தொற்று அதிகமாக உள்ளது.

இந்த வைரஸ் தாக்குதலால் இங்கிலாந்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 250 பேர் தனிமிப்ப்டுத்ஹ்டபட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.  அந்நாட்டுச் சுகாதார அமைச்சர் நாடின் டோரிஸ் இந்த தாக்குதலை ஒட்டி பல முன்னெச்சரிக்கை நடவடிக்கை இங்கிலாந்து எடுத்துள்ளதாகச்  சமீபத்தில் அறிவித்தார்.

இந்நிலையில் தற்போது இங்கிலாந்து சுகாதார அமைச்சர் நாடின் டோரிஸ் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.   அவருக்கு சில நாடுகளுக்கு முன்பு அந்நாட்டுப்  பிரதமர் போரிஸ் ஜான்சன் உள்ளிடோர் கலந்துக் கொண்ட ஒரு நிகழ்வில் கலந்துக் கொண்ட போது அவருக்கு கொரோனா தாக்குதல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

இதையொட்டி அமைச்சர் டோரிஸ் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.  அமைச்சர் கலந்துக் கொண்ட நிகழ்வில் கலந்துக் கொண்ட மற்ற பிரமுகர்கள்  மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கும் கொரோனா பரவி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.   அதையொட்டி அனைவரும் சோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளனர்.