மன்

நா சபை சார்பில் ஏமன் ஹொதைதா குழுத் தலைவராக பணி புரிந்த மைக்கேல் பணி ஓய்வு பெற்றதை அடுத்து இந்தியாவின் அபிஜித் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஏமனில் உள்ள ஹோதைதா நகரில் அரசுப்படையினருக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே போர் நடந்து வந்தது.   அந்தப் போரை நிறுத்த ஐநா சபை ஒப்பந்தம் ஒன்றை கடந்த  வருடம் நிறைவேற்றியது.   இந்த ஒப்பந்தத்தைக் கண்காணிக்க ஐநா ஒரு பாதுகாப்புக் குழுவை நிறுவி உள்ளது.

இந்தக் குழுவின் தலைவராக ஐநா சார்பில் டேனிஷ் ராணுவ  அதிகாரி ஜெனரல் மைக்கேல் லாலெஸ்கார்ட் தலைவராகப் பதவி வகித்து வந்தார்.  இவருடைய பதவிக்காலம் முடிவடைந்ததை ஒட்டி இவர் பணியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.   இவருக்கு பதிலாக இந்தியாவைச் சேர்ந்த முன்னாள் ராணுவ அதிகாரி அபிஜித் குகா நியமிக்கப்பட்டுள்ளதாக ஐநா சபை தலைவர் அண்டோனியோ கட்டரஸ அறிவித்துள்ளார்.

அபிஜித் குகா ராணுவத்தில் 39 ஆண்டுகள் பணியாற்றியவர் ஆவார்.   இவர் ஐநா சபையில் கடந்த 2009-13 வரை ராணுவ விவகார அலுவலகத்தில் இந்தியாவின் சார்பில்  பணி புரிந்துள்ளார்.   கடந்த 2013 ஆம் வருடம் அவர் இந்திய ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றார்.   பணி ஓய்வு  பெற்ற பிறகு அபிஜித் ஐநா அமைதிப்படை ஆலோசகராகப் பணி புரிந்தவர் ஆவார்.