லஞ்சம் கேட்ட வீடியோ எதிரொலி : 3 பாஜக அமைச்சர்களின் செயலாளர்கள் கைது

க்னோ

உத்திரப் பிரதேச மாநிலத்தில் லஞ்சம் கேட்ட வீடியோ வெளியாகியதால் 3 அமைச்சர்களின் செயலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்

உத்திரப் பிரதேசத்தில் பாஜக ஆட்சி செய்து வருகிறது. இம்மாநில முதல்வராக யோகி ஆதைத்யநாத் பதவி வகித்து வருகிறார். இவர் அமைச்சரவையில் சுரங்கத் துறை அமைச்சராக அர்ச்சனா பாண்டே, பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சராக ஓம்பிரகாஷ் ராஜ்பர் மற்றும் கல்வி அமைச்சராக சந்தீப் சிங் ஆகியோர் பதவியில் உள்ளனர்.

இம்மாநில தனியார் செய்தி நிறுவனத்துக்கு இந்த மூன்று அமைச்சர்களின் செயலாளர்களும் லஞ்சம் வாங்கி வருவதாக தகவல்கள் வந்துள்ளன அதை ஒட்டி இந்த நிறுவனம் ஸ்டிங் ஆப்பரேஷன் நடத்தி தங்கள் செய்தியாளரை ஒப்பந்த தாரர் போல இந்த மூன்று அமைச்சர்களின் செயலாளர்களிடம் நடத்தியது. அந்த செயலாளர்கள் பேசும் காட்சி அவர்களுக்கு தெரியாமல் வீடியோ பதிவு செய்யப்பட்டது.

இந்த பதிவில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜ்பரின் செயலாளர் பணி இட மாறுதலுக்காக ரூ.10 லட்சம் லஞ்சம் கேட்பது பதிவாகி உள்ளது. அத்துடன் மற்ற இரு அமைச்சர்களின் செயலாளர்களும் சுரஙக்த் துறை மற்றும் பாடபுத்தகங்கள் தொடர்பான ஒப்பந்தங்கள் வழங்க லஞ்சம் கோரி பேரம் பேசும் காட்சிகளும் பதிவாகி உள்ளன.

இந்த வீடியோ வெளியாகி அரசியல் உலகில் கடும் பரபரப்பை ஏற்படுத்தியது. முதல்வர் யோகி ஆதித்யநாத் சிறப்பு புலனாய்வுக் குழு ஒன்றை அமைத்து இதை விசாரிக்க ஆணை இட்டார். செயலாளர்கள் மூவரும் பணி இடை நீக்கம் செய்துள்ளனர். குழுவின் விசாரணையில் அவர்கள் லஞ்சம் கேட்டது புலனாகியதால் அவர்களை சிறப்பு புலனாய்வுக் குழு கைது செய்துள்ளது.