இந்திய இஸ்லாமியர்களை பாகிஸ்தானியர்கள் என்று அழைத்தால் சிறை தண்டனை விதிக்க வேண்டும்: ஓவைசி வலியுறுத்தல்

டில்லி:

ந்திய இஸ்லாமியர்களை பாகிஸ்தானியர்கள் என்று அழைத்தால் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க வேண்டும் என்று ஓவைசி வலியுறுத்தி உள்ளார்.

ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியின் தலைவரும் ஐதராபாத் எம்.பியுமான அசாதுதின் ஓவைசி,  மக்களவை யில் குடியரசுத்தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர், ““ இந்திய இஸ்லாமியர்களை  பாகிஸ்தானியர்கள் என அழைப்பதை தண்டிக்க கூடிய குற்றமாக அறிவிக்க வேண்டும். அப்படி  அழைப்பவர்களுக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்க கூடிய வகையில் சட்டம் இயற்ற வேண்டும்” என்றார்.

மேலும், “ நரேந்திர மோடி தலைமையிலான அரசு, இது போன்ற மசோதாவை பாராளுமன்றத்தில் கொண்டு வரப்போவது இல்லை” என்றும் சாடினார்.

தொடர்ந்து பேசிய அவர், “ முத்தலாக் மசோதா பெண்களுக்கு எதிரானது”  என்று தெரிவித்தார்.