தமிழகத்தில் அமமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது ஓவைசி கட்சி: 3 தொகுதிகள் ஒதுக்கீடு

சென்னை: அமமுக கூட்டணியில் வாணியம்பாடி, கிருஷ்ணகிரி, சங்கராபுரம் ஆகிய 3 தொகுதிகளில் ஒவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி போட்டியிடுகிறது.

தமிழக அரசியல் களமானது சட்டசபை தேர்தலை நோக்கி வேகமாக நகர்ந்து வருகிறது. அதிமுக, திமுக ஆகிய கட்சிகள் கூட்டணிகளுக்கு தொகுதிகளை ஒதுக்கீடு செய்து வருகின்றன. மற்றொரு புறம், கமல்ஹாசன், சமத்துவ மக்கள் கட்சி இணைந்துள்ளன.

இந் நிலையில் அமுமுகவும், அசாதுதீன் ஒவைசியின் அகில இந்திய மஜ்லிஸ் ஏ இந்திஹாதுல் முஸ்லிமீன் கட்சியும் தமிழக சட்டசபை தேர்தலில் கூட்டணி அமைத்துள்ளன. இவ்விரு கட்சிகளுக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தப்படி அசாதுதீன் ஓவைசி கட்சி தமிழகத்தில் வாணியம்பாடி, கிருஷ்ணகிரி, சங்கராபுரம் ஆகிய 3 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. தமிழகம் மட்டுமல்லாது புதுச்சேரி மாநில தேர்தலிலும் இவ்விரு கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன என்றும் அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.