ஆசாராம் பாபுவுக்கு ஆயுள் தண்டனை : ஜோத்பூர் நீதிமன்றம்

ஜோத்பூர்

டந்த 2013ஆம் வருடம் நடந்த சிறுமி பலாத்கார வழக்கில் சாமியார் ஆசாராம் பாபுவுக்கு ஜோத்பூர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி உள்ளது.

கடந்த 2013 ஆம் வருடம் மனாய் கிராமத்தில் உள்ள ஆசாராமின் ஆசிரமத்தில்  நடைபெற்ற சிறுமி பலாத்காரத்தில் ஆசாராம் மற்றும் அவரது மகன் மற்றும் வேறு சிலர் குற்றம் சாட்டப்பட்டனர்.   இந்த வழக்கு ஜோத்பூரில் உள்ள தலித்துகள் மற்றும் பழங்குடியினருக்கான நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது.

இன்று இந்த வழக்கில் சாமியார் ஆசாராம் மற்றும் சிபி, சரத் சந்திரா ஆகியோர் குற்றம் புரிந்தவர்கள் என ஜோத்பூர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.   மற்ற இருவரும் விடுவிக்கப்பட்டனர்.   இந்நிலையில் சாமியார் ஆசாராம் பாபுவுக்கு ஜோத்பூர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி உள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

வட இந்தியாவில் அரியானா, பஞ்சாப், உள்ளிட்ட பல மாநிலங்களில் கலவரம் நடக்கலாம் என அஞ்சப்படுவதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப் பட்டுள்ளன.