சிறுமி பலாத்காரம் : சாமியார் ஆசாராம் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு

ஜோத்பூர்

சிறுமி ஒருவரை பலாத்காரம் செய்த வழக்கில் சாமியார் ஆசாரம் குற்றவாளி என ஜோத்பூர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் அருகே உள்ள மனாய் ஆசிரமத்தில் சிறுமி ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் ஆசிரம சாமியார் ஆசாராம் பாபு உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் இன்று ஜோத்பூர் நீதிமன்றம் சாமியார் ஆசாராம் பாபு குற்றவாளி என தீர்ப்பு வழங்கி உள்ளது.

அரியானா, பஞ்சாப், சண்டிகர் மாநிலத்தில் இந்த தீர்ப்பை ஒட்டி கலவரங்கள் நிகழலாம் என அஞ்சப்படுகிறது.

உள்துறை அமைச்சகம் மேற்கூறிய மாநிலங்களில் பாதுகாப்பை பலப்படுத்த ஆணையிட்டுள்ளது.