ஜான்சன் அண்ட் ஜான்சன் குழந்தைகள் பவுடரில் ஆஸ்பெஸ்டாஸ் கலப்பு

நியூயார்க்

ர்வதேச நிறுவனமான ஜான்சன் அண்ட் ஜான்சன் குழந்தைகள் பவுடரில் ஆஸ்பெஸ்டாஸ் எனப்படும் கல்நார் கலந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஜான்சன் அண்ட் ஜான்சன் என்னும் புகழ்பெற்ற அமெரிக்க நிறுவனம் குழந்தைகள் பராமரிப்புக்கான சிறப்புப் பொருட்களை தயாரித்து வருகிறது. இந்த நிறுவனத்தின் குழந்தைகள் சோப், பவுடர், ஷாம்பு உள்ளிட்ட பொருட்கள் உலகெங்கும் வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆயினும் இந்நிறுவனத்தின் பொருட்களைப் பற்றி புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில் இந்த நிறுவனம் தயாரித்த குழந்தைகள் பவுடரினால் கர்ப்பப்பையில் புற்று நோய் உண்டாவதாக சர்ச்சைகள் எழுந்தன. அதை ஒட்டி எழுந்த வழக்கில் இந்த நிறுவனத்தின் பவுடர் ரசாயன பரிசோதனை செய்யப்பட்டது. அந்த பரிசோதனையில் ஜான்சன் அண்ட் ஜான்சன் குழந்தைகள் பவுடரில் ஆஸ்பெஸ்டாச் எனப்படும் கல்நார் கலந்திருப்பது கண்டறியப்பட்டது.

இது தொடர்பாக ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவன குழந்தைகள் பவுடர் தயாரிக்கும் தொழிற்சாலை ஆவணங்கள் சோதனை இடப்பட்டன. அதில் மேலும் ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 1999 ஆம் ஆண்டு இந்த நிறுவனம் நடத்திய ஆய்வில் இந்த பவுடரில் ஆஸ்பெஸ்டாஸ் கலந்திருப்பது நிறுவனத்துக்கு தெரிய வந்த போதிலும் பவுடரின் உற்பத்தியை தொடர்ந்து நடத்தி வந்துள்ளது கண்டறியப் பட்டுள்ளது.

அதிர்ச்சியூட்டும் இந்த தகவல் குறித்து நிறுவனம் எந்த ஒரு கருத்தும் தெரிவிக்காமல் உள்ளது. இந்த கல்நார் கலப்பு பிரச்னையால் இந்த நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பு கடுமையாக சரிந்துள்ளது.