மணிலா: கடந்த 1982ம் ஆண்டின் ஐ.நா. பெருங்கடல் ஒப்பந்தமே, தென் சீன கடலில் நாடுகளின் இறையாண்மை மற்றும் உரிமைகளுக்கான அடிப்படையாக இருக்க வேண்டுமென தெரிவித்துள்ளனர் தென்கிழக்காசிய நாடுகளின் தலைவர்கள்.

தென்சீனக் கடல் பகுதியை, சீன முழுவதுமாக உரிமை கொண்டாடிவரும் நிலையில், அதற்கு எதிராக இந்தக் கருத்தை தெரிவித்துள்ளனர் இத்தலைவர்கள்.

மொத்தம் 10 நாடுகளின் கூட்டமைப்பு சார்பில், வியட்நாமில் கடந்த சனியன்று வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த நிலைப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நாடுகளின் தலைவர்கள், தங்களின் வருடாந்திரக் கூட்டத்தை வீடியோகான்பரன்ஸ் மூலம் நடத்தினர். கொரோனா பரவல் மற்றும் கடல் உரிமைப் பிரச்சினை ஆகியவை குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

கடலில், நாடுகளின் இறையாண்மை, உரிமைகள், சட்டப்பூர்வ செயல்பாடுகளுக்கு கடந்த 1982ம் ஆண்டின் UNCLOS ஒப்பந்தமே அடிப்படையாக அமைய வேண்டுமென அவர்கள் வலியுறுத்தினர்.