‘தில்’ படத்தில் விக்ரமுக்கு வில்லனாக நடித்து, தமிழ் சினிமாவில் பிரபலமானவர் ஆசிஷ் வித்யார்த்தி. 2015-ம் ஆண்டு தனுஷ் நடித்த ‘அனேகன்’ படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில், ஸ்ரீகாந்த் நாயகனாக நடித்து வரும் ‘எக்கோ’ படத்தில் தற்போது ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.

சைக்கலாஜிக்கல் த்ரில்லர் பாணியில் இந்தப் படம் உருவாகி வருகிறது. ஸ்ரீகாந்த், வித்யா பிரதீப், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படத்தை நவீன் கணேஷ் இயக்கி வருகிறார்.

ஒளிப்பதிவாளராக கோபிநாத், இசையமைப்பாளராக ஜான் பீட்டர், எடிட்டராக சுதர்ஷன் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். டாக்டர் ராஜசேகர் மற்றும் ஹாரூன் ஆகியோர் இணைந்து தயாரித்து வருகிறார்கள்.