ஆட்டோமொபைல் துறையில் வீழ்ச்சி: வேலையில்லா நாட்களை அறிவித்த அசோக் லேலண்ட்

சென்னை: டிசம்பர் மாதத்துக்கான வேலையில்லாத நாட்களை அசோக் லேலண்ட் நிறுவனம் அறிவித்து இருக்கிறது.

இது தொடர்பான அறிக்கை ஒன்றை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது: நிறுவனத்தின் சில உற்பத்தி நிலையங்களில் இந்த வேலையில்லாத நாட்கள் அமலுக்கு வரும்.

2 முதல் 12 நாட்கள் வரை வேலையில்லாத நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆட்டோமொபைல் துறையில் ஏற்பட்ட வீழ்ச்சியில் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

அசோக் லேலண்ட் போன்றே, மாருதி, ஹீரோ, டிவிஎஸ் ஆகிய நிறுவனங்களும் ஏற்கனவே வேலையில்லா நாட்களை அறிவித்துவிட்டன. அசோக் லேலண்ட் நிறுவனமானது, கடந்த ஆண்டு இதே மாதத்தில் 13.119 வாகனங்களை உற்பத்தி செய்திருக்கிறது.