தமிழ்நாட்டுக்கு வரவிருக்கும் அசோக் லேலண்ட் பேருந்துகள்!

புதுடில்லி: ஹிந்துஜா குழுமத்திற்குட்பட்ட அசோக் லேலண்ட் நிறுவனமானது தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் தம்மிடம் 1750 பேருந்துகள் வாங்க உள்ளதாக தெரிவித்துள்ளது.

நீண்ட காலமாக வெற்றியுடன் பயணித்துக் கொண்டிருந்த அசோக் லேலண்ட் நிறுவனமானது சமீபகாலமாக தனது முன்னேற்றப் பயணத்தில் பல சவால்களை சந்தித்துக் கொண்டிருந்தது.

இந்நிலையில், கடந்த புதன்கிழமை அது தமிழ்நாடு மாநில போக்குவரத்துக் கழகம் தம்மிடம் 1750 பேருந்துகளை வாங்குவதற்கு ஆர்டர் செய்துள்ளதாகவும் இன்னும் பல மாநிலங்கள் தம்மிடம் அவ்வாறே வாங்க உள்ளதாகவும் தெரிவித்தது.

“நாங்கள் இந்த ஆர்டர் உறுதியாகியுள்ளதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம். தரத்தைக் கொணர்வதில் எங்கள் திறமை, மிகவுயர்ந்த நுணுக்கம் மற்றும் புதுமையின் முயற்சிகள் ஆகியவை பேருந்தில் எங்களது தலைமையை பேண உதவும்” என்று நிறுவனத்தின் சி.ஓ.ஓ அனுஜ் கத்துரியா கூறினார்

தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் இன்னும் ஒரு சிறிய கால இடைவெளியில் தனது சாலைகளில் தரமான புத்தம் புதிய அசோக் லேலண்ட் பேருந்துகளை காணவிருக்கின்றது. அசோக் லேலண்ட் நிறுவனமும் தனது சவால்மிக்க சூழ்நிலையில் இந்த ஆர்டரை பெரும் வாய்ப்பாகக் கருதுகிறது.