புதுமுக இயக்குநர் ஸ்வாதினி இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் அசோக் செல்வன்ஒப்பந்தம்…..!

அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘ஓ மை கடவுளே’.

அதை தொடர்ந்து தமிழ் – தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் புதிய படமொன்றில் நடித்து வருகிறார் அசோக் செல்வன். அனி சசி இயக்கி வரும் இந்தப் படத்தில் நித்யா மேனன் மற்றும் ரீத்து வர்மா இருவரும் நடித்து வருகிறார்கள்.

இந்தப் படத்தைத் தொடர்ந்து கெனன்யா பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க, புதுமுக இயக்குநர் ஸ்வாதினி இயக்கும் புதிய படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் அசோக் செல்வன்.இந்தப் படத்தில் அசோக் செல்வனுக்கு நாயகியாக நிஹாரிகா நடிக்கவுள்ளார்.