‘தெகிடி’ படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார் அசோக் செல்வன். தற்போது ‘ஓ மை கடவுளே’ படத்தில் நாயகனாக நடித்துள்ளார்.

இதனிடையே ப்ரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால் நடித்துள்ள ‘மாராக்கர்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்

இந்தப் படத்தை ப்ரியதர்ஷனுடன் இணைந்து எழுதியுள்ளார் அனி சசி. இவர் மலையாளத்தில் பிரபலமான இயக்குநரான ஐவி சசியின் மகனாவார்.

தற்போது அனி சசி இயக்கவுள்ள தெலுங்குப் படத்தில் நாயகனாக நடிக்கவுள்ளார் அசோக் செல்வன்.

இதில் சமையல்காரராக நடிக்கவுள்ளதால், இதற்காக உடல் எடையை அதிகரித்து வருகிறார் அசோக் செல்வன். அவர் உடல் எடையை அதிகரித்தவுடன் படப்பிடிப்பைத் தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளது.