அசோக் செல்வனின் அடுத்த படம் ‘ஃபேட் செஃப்’….!

 

அசோக் செல்வன் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் உருவாகும் ‘ஃபேட் செஃப்’ படத்தில் நடித்து வருகிறார்.

இந்தப் படத்தில் நித்யா மேனன் மற்றும் ரீத்து வர்மா இருவரும் நாயகிகளாக நடித்து வருகிறார்கள்.

இயக்குநர் ஐவி சசியின் மகன் அனி சசி இந்தப் படத்தினை இயக்கி வருகிறார். இதன் பெரும்பாலான காட்சிகள் இங்கிலாந்தில் படமாக்கப்பட்டுள்ளன.

இப்படத்தில் திவாகர் மணி ஒளிப்பதிவாளராகப் பணிபுரிந்து வருகிறார்.