கொரோனா தடுப்புக்கு ‘அஸ்வகந்தா’ அசத்தல் பலன்…

--

சென்னை:

கொரோனா தடுப்பு மருந்தாக. சித்தமருத்துவ மருந்தா அஸ்வகந்தா மூலிகை  அருமையான பலன் தருவதாக டெல்லி ஐஐடி மற்றும் ஜப்பானின் நவீன தொழில்துறை அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்துக்கான தேசிய நிறுவனம் தெரிவித்து உள்ளது.

இந்த நிறுவனம் கடந்த சில மாதங்களாக மேற்கொண்டு வந்த ஆராய்ச்சில் அஸ்வகந்தா மூலிகை எடுத்துக்கொள்வதால் பிரமிக்கத்தக்க நோய் எதிர்ப்பு சக்தி கிடைப்பதாகவும், இதை கொரோனா தடுப்பு மருந்தாக பயன்படுத்தலாம் என்றும் பரிந்துரைத்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க 600க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மருந்து கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக பணியாற்றி வருகின்றன. இதற்காக கோடிக்கணக்கான ரூபாய்களையும் தண்ணீராக இறைத்து வருகின்றன. ஆனால், அதில் எந்தவொரு முன்னேற்றமும் கிட்டவில்லை.

இந்த நிலையில்,  தமிழ்நாட்டின் பாரம்பரிய மருத்துவமான, சித்த மருத்துவ  மூலிகைகளும் பயனளிக்குமா? என்பது தொடர்பாகவும் ஆய்வுகள்  மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஏற்கனவே கபசுர குடிநீர், நிலவேம்பு குடிநீர் நல்ல நோய் எதிர்ப்பு சக்தியை கொடுப்பதாக அறிவிக்கப்பட்டு, பொதுமக்கள் பருக அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் கொரோனா தடுப்பு மருந்தாக அஸ்வகந்தா மூலிகை பலனளிக்கும் என நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் நோய்த்தொற்றுக்கான தடுப்பு மருந்தாகவும், அதற்கு சிகிச்சை அளிப்பதற் கான மருந்தாகவும் அஸ்வகந்தா மூலிகை இருக்கும் என்று ஆராய்ச்சியில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

டெல்லி ஐஐடி மற்றும் ஜப்பானின் நவீன தொழில்துறை அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துக்கான தேசிய நிறுவனம் ஆகியவை கூட்டாக மேற்கொண்ட ஆராய்ச்சியில் இது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து கூறிய, டெல்லி ஐஐடியின் உயிரிதொழில்நுட்ப துறை தலைவர் டி.சுந்தர் பேசுகையில், அஸ்வகந்தா மற்றும் தேனீக்கள் தயாரிக்க கூடிய பிசின் ஆகியவற்றின் சேர்மானம் கொரோனா நோய்த்தொற்றுக்கான தடுப்பு மருந்தாக பயன்படக்கூடிய திறனை கொண்டிருக்கிறது என தெரிவித்து உள்ளார்.

இதுதொடர்பாக ஆய்வக மற்றும் மருத்துவமனை ரீதியிலான மதிப்பீடுகளை மேற்கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. இந்த கண்டுபிடிப்பானது கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனைக்கு ஆகும் நேரம் மற்றும் செலவை குறைப்பதற்கு உதவிகரமாக அமையும். அத்துடன், கொரோனா நோய்த்தொற்றுக்கான தடுப்பு மருந்தாகவும், அதனால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு சிகிச்சை அளிக்கக் கூடிய மருந்தாகவும் இது பயன்படுத்தலாம்.

கொரோனா வைரசின் மேல் புரத்தில் முட்கள் போன்றிக்கும் புரதத்தை தாக்கும் தன்மையை இம்மருந்து கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சேர்மானத்தை மருந்தாக தயாரிப்பதற்கு சிறிது காலம் எடுக்கும். இது எளிதாக, குறைந்த விலையில் கிடைக்கக் கூடியதாக இருந்தாலும், அவற்றின் இயற்கை அடிப்படையிலான தன்மைகள் சற்று வீரியமானவை என்பதால் மிகுந்த எச்சரிக்கையும் அவசியம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மத்தியஅரசு பாரம்பரிய மூலிகளையும், அதன் பயன்களையும்,  தேவைகளையும் உலகுக்கு உணர்த்த  முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று பாரம்பரிய மருத்துவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். 

இந்தியாவின் சிறந்த உடற்கல்வியான யோகாவை உலக நாடுகளுக்கு உணர்த்தி மத்திய அரசு, நமது பாரதத்தின் பாரம்பரிய மூலிகைகள் மற்றும் அதன் பயன்களையும் உலக நாடுகளுக்கு உணர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது… செய்யுமா மோடி அரசு…