599 சர்வதேச விக்கெட்டுகள் – இந்தியளவில் 4வது பெளலராக உயர்ந்த அஸ்வின்!

அகமதாபாத்: இந்தியளவில், சர்வதேச கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை, அனைத்துவகை கிரிக்கெட்டிலும் சேர்த்து கைப்பற்றியவர்களில் 4வது இடத்தைப் பிடித்துள்ளார் ரவிச்சந்திரன் அஸ்வின்.

இன்றையப் போட்டியில் அவருக்கு 3 விக்கெட்டுகள் கிடைத்தன. இதனுடன் சேர்த்து, சர்வதேச கிரிக்கெட்டின் அனைத்து வகைகளிலும் மொத்தமாக 599 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார் அஸ்வின். இதன்மூலம் ஜாகிர்கானின் 597 விக்கெட்டுகள் சாதனையை முறியடித்துள்ளார்.

முதலிடத்தில், 953 விக்கெட்டுகளுடன் அனில் கும்ளே உள்ளார். 707 விக்கெட்டுகளுடன் இரண்டாமிடத்தில் உள்ளவர் ஹர்பஜன் சிங். 687 விக்கெட்டுகளுடன் மூன்றாமிடத்தில் உள்ளவர் கபில் தேவ். தற்போது, இந்தப் பட்டியலில் நான்காவதாக இணைந்துள்ளார் 599 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ள அஸ்வின்.

மேலும், டெஸ்ட் போட்டிகளில், 400 விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை எட்ட, அஸ்வினுக்கு 3 விக்கெட்டுகள் மட்டுமே பாக்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

You may have missed