டேவிட் வார்னரை 10வது முறையாக அவுட் செய்த ரவிச்சந்திரன் அஸ்வின்!

சிட்னி: டெஸ்ட் போட்டிகளில், ஆஸ்திரேலிய நட்சத்திர பேட்ஸ்மேன் டேவிட் வார்னரை, மொத்தம் 10 முறை அவுட்டாக்கி சாதித்துள்ளார் இந்தியாவின் அஸ்வின்.

இன்றையப் போட்டியில், இரண்டாவது இன்னிங்ஸில் டேவிட் வார்னர் 13 ரன்கள் எடுத்திருந்தபோது, அவரை LBW முறையில் காலிசெய்தார் அஸ்வின். இதன்மூலம், டெஸ்ட் போட்டிகளில், வார்னரை மொத்தம் 10 முறை அவுட்டாக்கியவர் என்ற சாதனையை எட்டியுள்ளார் அஸ்வின்.

அஸ்வினால், அதிகமுறை அவுட் செய்யப்பட்டவர்களின் பட்டியலில் தற்போது முதலிடத்தில் இருப்பவர் டேவிட் வார்னர்தான். இரண்டாவது இடத்தில் இருப்பவர் இங்கிலாந்தின் ஆலஸ்டர் குக். இவர் மொத்தம் 9 முறை அஸ்வினால் அவுட் செய்யப்பட்டுள்ளார்.

இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ், மொத்தம் 7 முறை அஸ்வினிடம் வீழ்ந்துள்ளார்.

வார்னர் இதுவரை அதிகமுறை அவுட்டானது யாரிடமென்றால், இங்கிலாந்தின் ஸ்டூவர்ட் பிராடிடம். அவர், மொத்தம் 12 முறை வார்னரை காலி செய்துள்ளார்.