துபாய்: ‍பெங்களூருக்கு எதிரான போட்டியில், அந்த அணியின் வீரர் ஆரோன் பின்ச்சை ‘மேன்கடிங்’ முறையில் அவுட் செய்ய வாய்ப்பிருந்தும் எச்சரிக்கை மட்டுமே செய்தார் டெல்லி அணியின் அஸ்வின்.
பெங்களூருவுக்கு எதிரான போட்டியில், ஷ்ரேயாஸின் டெல்லி அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் பிரமாண்ட வெற்றி பெற்றது. டெல்லி அணி நிர்ணயித்த 196 ரன்கள் இலக்கை விரட்டிய பெங்களூரு அணி, 139 ரன்களுக்கே மொத்தமாக தடுக்கி விழுந்தது.
கடந்த ஐபிஎல் போட்டியில், ராஜஸ்தான் அணியின் ஜோஸ் பட்லரை ‘மேன்கடிங்’ முறையில் அவுட் செய்தார் சச்சின். இதை சிலதரப்பார் ‘கிரிக்கெட் ஸ்பிரிட்’ இல்லாத செயல் என்று விமர்சித்தனர்.
தற்போது டெல்லி அணியின் பயிற்சியாளராக உள்ள ரிக்கிப் பாண்டிங் இவர்களுள் முக்கியமானவர். தற்போது இவர் டெல்லி அணியின் பயிற்சியாளராக உள்ளார்.
இந்நிலையில், நேற்று பெங்களூரு அணிக்கெதிரான போட்டியில், அஸ்வின் பந்துவீசுகையில், எதிரணியின் ஆரோன் பின்ச், கிரீஸை விட்டு வெளியே நின்றிருந்தார். ஆனால், அவரை ‘மேன்கடிங்’ செய்யாத அஸ்வின், எச்சரிக்கை மட்டுமே செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.