ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சாளர் தரவரிசையில், இந்தியாவின் அஸ்வின், 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இங்கிலாந்திற்கு எதிராக இதுவரை நடந்துள்ள மூன்று டெஸ்ட் போட்டிகளிலும், மிகச் சிறப்பாக செயல்பட்டதால் இந்த முன்னேற்றம் கண்டுள்ளார் அஸ்வின்.

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், மொத்தம் 9 விக்கெட்டுகளை எடுத்தார். இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட்டுகளை வீழ்த்திய இவர், மூன்றாவது டெஸ்ட் போட்டியில், மொத்தம் 7 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஆக மொத்தம், இதுவரை இத்தொடரில் 24 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார் அஸ்வின்.

அவர், மொத்தம் 823 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தைப் பிடித்துள்ளார். முதலிடத்தில் ஆஸ்திரேலியாவின் பேட் கம்மின்ஸ் உள்ளார்.