டெஸ்ட் தொடரில் காயமடைந்த அஸ்வின்

எஸ்ஸக்ஸ் அணிக்கு எதிரான 3நாட்கள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் நாள் ஆட்டத்தில் இந்திய அணியின் பந்து வீச்சாளரான அஸ்வின் காயமடைந்தார். தனது வலது கையில் ஏற்பட்ட காயம் காரணமாக 2ம் நாள் ஆட்டத்தில் அஸ்வின் பங்கேற்கவில்லை.

ASHWIN

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டி20 போட்டிகள், ஒருநாள் தொடர் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. 3 நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 299 ரன்களை எடுத்தது. இந்த போட்டியின் போது, ஸ்பின் பவுலரான அஸ்வினின் வலது கையில் லேசான காயம் ஏற்பட்டது.

இதன் காரணமாக சிறிது ஓய்வு எடுக்க விரும்பிய அஸ்வின் இரண்டாம் நாள் ஆட்டத்தில் பங்கேற்கவில்லை. அவருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளதால் விரைவில் சரியாகிவிடும் என்று அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் 100.2 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இந்திய அணி 395 ரன்களை எடுத்தது. தினேஷ் கார்த்திக் 82 ரன்களையும், ஹர்திக் பாண்டியா 51 ரன்களையும் எடுத்தனர்.