Random image

ஆசிய கோப்பை: 91 ரன்களில் இலங்கையை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அபார வெற்றி

ஆசிய விளையாட்டுப் போட்டியின் இலங்கை அணியை 91 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது.

afghanistan

14வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் துபாய் மறும் அபுதாபியில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஹாங்காங், வங்கதேசம், இலங்கை உள்ளிட்ட நாடுகள் பங்கேற்று ஏ மற்றும் பி பிரிவுகளில் விளையாடி வருகின்றன. இந்நிலையில் 3வது நாள் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணியும், இலங்கை அணியும் மோதின.

டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய முகமது ஷேசாத் மற்றும் ஜனத் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 72 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தனர். இவர்களுக்கு பிறகு களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களிலேயே ஆட்டமிழக்க 50 ஓவர்கள் முடிவில் ஆப்கானிஸ்தான் 249 ரன்கள் எடுத்திருந்தது.

இதையடுத்து, 250 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி வீரர்கள், ஆப்கானிஸ்தான் வீரர்களின் சுழல் பந்து வீச்சுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் திணறினர். ஆப்கானிஸ்தான் வீரர்கள் தொடர்ந்து விக்கெட்டுகளை வீழ்த்த இலங்கை அணி 41.2 ஓவர்களில் 158 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது. இலங்கை அணி சார்பாக உபுல் தரங்கா 36 ரன்களையும், திசாரா பெராரா 28 ரன்களையும் எடுத்திருந்தனர்.

இந்நிலையில் இலங்கை அணியை 91 ரன்கள் வித்யாசத்தில் வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அணி வெற்றிப்பெற்றது. போட்டியின் ஆட்ட நாயகனாக ரஹ்மத் ஷா தேர்வு செய்யப்பட்டார்.