ஆசியக் கோப்பை இறுதி போட்டியில் இந்தியாவை எதிர்கொள்ளும் வங்கதேசம்

ஆசிய கோப்பை இறுதி போட்டியில் வங்கதேசம் மற்றும் இந்திய அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. சூப்பர் 4 சுற்றில் பாக்கிஸ்தானை எதிர்கொண்ட வங்கதேசம் 37 ரன்கள் வித்யாசத்தில் வெற்றிப்பெற்று இறுதி போட்டிக்கு தகுதிப்பெற்றுள்ளன.

ind-vs-ban

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை அடைந்துள்ளது. லீக் சுற்றை கடந்து இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் ‘சூப்பர் 4’ சுற்றுக்கு முன்னேறின. அதனை தொடர்ந்து, நேற்று நடைபெற்ற ‘சூப்பர் 4’ போட்டியில் வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின.

முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் அணி, 48.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 239 ரன்கள் குவித்தன. அதிரடியாக விளையாடிய முஷ்ஃபிகுர் ரஹிம் 99 ரன்கள் அடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். பாகிஸ்தான் அணியைச் சேர்ந்த ஜூனைத் கான் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய பாகிஸ்தான் அணிக்கு இமாம்-உல்-ஹக் 83 ரன்கள் எடுத்து சிறப்பான தொடக்கத்தை அளித்தார். எனினும், அடுத்து களம் இறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்ததால் வெற்றி இலக்கை அடைய முடியாமல் பாகிஸ்தான் அணி திணறியது. 50 ஓவர்கள் முடிவில், 9 விக்கெட் இழப்பிற்கு 202 ரன்கள் மட்டுமே பாகிஸ்தான் அணி எடுத்தது. இதனால், 37 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசம் அணி வெற்றி பெற்றது.

இந்த வெற்றியை தொடர்ந்து இறுதி போட்டிக்கு வங்கதேச அணி முன்னேறியுள்ளது. நாளை நடைப்பெற உள்ள இறுதி போட்டியில் வங்கதேச அணி இந்தியாவை எதிர்த்து விளையாட உள்ளது. இந்நிலையில் இறுதி போட்டியில் இந்தியாவை வெற்றிக்கொள்ள வங்கதேச அணியின் வீரர்கள் ஆயத்தமாகி வருகின்றனர். போட்டி குறித்து மஷ்ரஃப் போர்தாசா கூறுகையில், “ வீரர்கள் மீது மிகுந்த நம்பிக்கை உள்ளது. எனினும் நாங்கள் போட்டியின் போது கடிமாக விளையாட வேண்டி உள்ளது. பந்து வீச்சாளர்கள் சிறந்த ஃபார்மில் உள்ளனர். அணியில் ஒருசில மாற்றங்களை மட்டுமே செய்ய உள்ளோம் “ என்று தெரிவித்தார்.

இதேப்போன்று இந்திய அணியில் சுழல்பந்து வீச்சாளர்கள் வங்கதேச அணியின் வீரர்களுக்கு சவாலாக உள்ளனர். பலமிக்க இரு அணிகள் மோதிக்கொள்ளும் இறுதி போட்டியில் சுவாரசியத்திற்கு பஞ்சமிருக்காது. லீக் மற்றும் சூப்பர் 4 சுற்றில் இந்தியா தொடர்ந்து வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


-=-