ஆசிய கோப்பை கிரிக்கெட்: தோனி தலைமையில் இன்று ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது இந்திய அணி

துபாய்:

சிய கோப்பை கிரிக்கெட்  போட்டிகள் கடந்த  15ந்தேதி  முதல் துபாய் மற்றும் அபுதாபி போன்ற நாடுகளில்  நடைபெற்று வருகின்றன.ஏற்கனவே நடைபெற்ற போட்டிகளில் வெற்றிபெற்றுள்ள இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தேர்வாகி உள்ள நிலையில் இன்று ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது.

இன்றைய போட்டிக்கு, கேப்டன் ரோகித் சர்மாவுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ள நிலையில், அணியில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ள. நிலையில், முன்னாள் கேப்டன் தோனி தலைமை ஏற்று விளையாடுகிறார்.

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றுப் போட்டிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.  இந்த தொடரில், ஆப்கானிஸ்தான் அணி, தன்னை எதிர்த்து விளையாடிய அனைத்து அணிகளுக்கும் கடுமையான போட்டியை ஏற்படுத்திய ஆப்கானிஸ்தான் அணி  சராசரியாக 250 ரன்கள் எடுத்தும், தனதுஅணியின் பந்துவீச்சாளர்களின் அபாரமான பந்துவீச்சு மூலம் எதிரணிக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது.

இருந்தாலும் போட்டிகளில் தோல்வியை சந்தித்ததால், இறுதி போட்டி வாய்ப்பை இழந்த நிலையில் இன்று  இந்தியாவை எதிர்கொள்கிறது.

துபாய் மைதானத்தில் இன்று நடைபெற்று வரும் போட்டியில், டாஸ் வென்ற . ஆப்கானிஸ்தான் அணி  கேப்டன் பேட்டிங் தேர்வு செய்து விளையாடி வருகிறது.

இன்றைய ஆப்கானிஸ்தான் அணியின் ஆக்ரோஷமான பந்துவீச்சை கட்டுப்படுத்த, இந்திய பேட்ஸ்மேன்கள் தயாராக இருக்கிறார்கள். ஏற்கனவே  ரஷீத் கான் மற்றும் முஜிபுர் ரஹ்மான் ஆகியோரது பந்துவீச்டை ஐ.பி.எல் போட்டிகளில்  இந்திய வீரர்கள் எதிர்கொண்டுள்ள நிலையில், இன்றைய போட்டியை எளிதாக சமாளித்து விடலாம் என்று இந்திய அணி நம்பிக்கையோடு உள்ளது.

இந்த போட்டியில் கேப்டன் ரோஹித் ஷர்மாவுக்கு இந்தப் போட்டியில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால், முன்னாள் கேப்டன் தோனி இன்றைய போட்டிக்கு  தலைமை ஏற்றுள்ளார். மேலும், , தவான், பும்ரா, புவனேஷ்வர் குமார் மற்றும் சஹால் அகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு பதிலாக, கே.எல்.ராகுல், மணீஷ் பாண்டே, தீபக் சஹார், கலீல் அகமது மற்றும் சித்தார்த் கௌல் ஆகியோர் பிளேயிங் லெவனில் இடம்பெற்றுள்ளனர்.

ஐ.பி.எல் போட்டிகளில் சென்னை அணிக்காக விளையாடிய தீபக் சஹார், இந்தப் போட்டி மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமாகிறார்.