தன்னை கிண்டலடித்து பேனர் வைத்த போலீசாருக்கு பதிலடி கொடுத்த பும்ரா

நோ-பால் வைத்த போக்குவரத்து போலீசாருக்கு கிரிக்கெட் வீரர் பும்ரா சரியான பதிலடி கொடுத்துள்ளார். பும்ரா புகைப்படத்துடன் பேனர் அடித்து போக்குவரத்து விதிகளை கடைபிடிக்கும் படி ஜெய்ப்பூரில் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.

pumra

சில நேரங்களில் பும்ரா வீழ்த்தும் விக்கெட் சரியாக நோ-பால் ஆக இருப்பது அவ்வபோது சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. கடந்த ஆ ண்டு 2017 சாம்பியன்ஸ் டிரோபி கிரிக்கெட் போட்டியின் போது இறுதிப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில், தொடக்கவீரர் ஃபகர் ஜமனை பும்ரா அவுட்டாக்கினார். ஆனால் அது நோ-பால் ஆக இருந்ததால் விக்கெட் கொடுக்கப்படவில்லை. இறுதிப் போட்டியின் முக்கியமான விக்கெட் எடுக்க வேண்டிய நிலையில் பும்ராவின் நோ-பாலால் இந்திய அணியின் வெற்றி பறிபோனதாக கிண்டலடிக்கப்பட்டது.

இந்நிலையில் நடந்து முடிந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் பும்ரா எடுத்த விக்கெட் நோபால் ஆனதை விமர்சிக்கும் விதமாக ஜெய்ப்பூரில் பேனர்கள் வைக்கப்பட்டன. பும்ராவின் நோ-பால் புகைப்படத்துடன், ” சாலை விதிகளை மீறினால் இழப்பு தான் எனவே, சாலை விதிகளை பின்பற்றுக “ எனக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஜெய்பூர் போக்குவரத்து போலீஸார் சாலைகளில் பேனர்களை வைத்தனர்.

இந்த பேனர் பற்றி அறிந்த பும்ரா ஆசிய கோப்பையுடன் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு, “ சிலர் படைப்பாற்றல் மூளையுடன் பேனர் டிசைன் செய்பவர்களாக இருக்கின்றனர். அவர்களுக்கு இந்த புகைப்படம் நிச்சயம் உதவும் என நம்புகிறேன் ” என தன்னை கிண்டல் செய்தவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.