ஆசிய கோப்பை: பாக்கிஸ்தான் பந்து வீச்சில் 116 ரன்களில் சுருண்டது ஹாங்காங்

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஹாங்காங் அணியை 116 ரன்களில் சுருட்டியது பாக்கிஸ்தான் அணி. அடுத்து 117 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாக்கிஸ்தான் அணி களமிறங்கியுள்ளது.

pakistan

14வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் துபாயில் நடைபெற்று வருகின்றனர். இதன் ஏ பிரிவில் இந்தியா, பாக்கிஸ்தான், ஹாங்காங் அணிகளும், பி பிரிவில் ஆப்கானிஸ்தான், இலங்கை, வங்கதேச அணிகளும் பங்கேற்று விளையாடுகின்றன. இந்நிலையில் இன்று தொடங்கிய 2வது நாள் ஆட்டத்தில் ஹாங்காங் மற்றும் பாக்கிஸ்தான் அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.

போட்டியில் டாஸ் வென்ற ஹாங்காங் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. பாக்கிஸ்தான் வீரர்களின் பந்து வீச்சுக்களை சமாளிக்க முடியாமல் 35.1 ஓவர்களில் 116 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது. இதையடுத்து பாக்கிஸ்தானுக்கு 117 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து வெற்றிப்பெறும் முனைப்போடு பாக்கிஸ்தான் வீரர்கள் களமிறங்கி உள்ளனர். இதுவரை 12 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 56 ரன்களை பாக்கிஸ்தான் எடுத்துள்ளது.

வரும் 18ம் தேதி ஹாங்காங்கிற்கு எதிராகவும், 19ம் தேதி பாக்கிஸ்தானிற்கு எதிராகவும் இந்தியா விளையாட உள்ளது.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


-=-