ஆசியக் கோப்பை: சதம் கடந்த லிடன் தாஸ் – இந்தியாவிற்கு 223 ரன்கள் இலக்கு

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் இந்தியாவிற்கு 223 ரன்களை வங்கதேச அணி இலக்காக நிர்ணயித்துள்ளது.

litton

14வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேச அணி மோதுகின்றன. இதில் ‘டாஸ்’ வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா ‘பீல்டிங்’ தேர்வு செய்தார் போட்டியில் பெஞ்ச் வீரர்களை களமிறக்கி சோதனை செய்த இந்திய அணி, வழக்கமான 5 வீரர்களை மீண்டும் இந்திய அணியில் தேர்வு செய்தது.

வங்கதேச அணி சார்பில் முதலில் மொஹாதி ஹசன் மற்றும் லிடன் தாஸ் களமிறங்கினர். முதல் பத்து ஓவர் முடிவில், லிடன் தாஸ் அரைசதம் கடக்க அணியின் ஸ்கோர் 65 ரன்களாக இருந்தது. தொடர்ந்து லிடன் தாஸ் மற்றும் ஹசன் நிதான மான ஆட்டத்தையே வெளிப்படுத்தினர். 15 ஓவர் முடிவில், வங்கதேச அணி விக்கெட் இழப்பின்றி, 86 ரன்களை எடுத்திருந்தது. இந்நிலையில் 20.5 ஓவரில் ராயுடு வீசிய பந்தை எதிர்கொண்ட மொஹாதி ஹசன் 32 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

அதன்பிறகு 23.5 ஓவரில் சகால் பந்து வீச்சில் காயிஸ் வெளியேற, லிடன் தாஸுடன் ரஹீம் இணை சேர்ந்தார். அடுத்தடுத்து களமிறங்கிய வங்கதேச வீரர்கள் சொற்ப ரன்களிலேயே ஆட்டமிழந்து வெளியேறினர். தொடர்ந்து பும்ரா, யாதவ் மற்றும் ஜாதவ் விக்கெட் எடுக்க வங்கதேச அணி 48.3 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 222 ரன்களை எடுத்தது. அணியின் ஸ்கோரை உயர்த்தியதில் லிடன் தாஸின் பங்கு அளப்பறியது. லிடன் தாஸ் எதிர்கொண்ட 117 பந்துக்களில் 121 ரன்கள் எடுத்து அசத்தியுள்ளார்.

இந்திய அணி சார்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளையும், கேதர் ஜாதவ் 2 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளனர். இதையடுத்து 223 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்க உள்ளது.

You may have missed